கோவை : கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் அதிகாரிகளின் அனுமதியின்றி 15 ஆண்டுகள் பழமையான மரம் வெட்டப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவாணி சாலையில் உள்ள சாடிவயல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு வழிவிடும் வகையில் சிறிய மரங்களை வெட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், சாலை ஓரத்தில் நன்கு வளர்ந்த மற்றும் சிறிய வளரும் செடிகளை பிடுங்கி எரியப்பட்டு வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, டி.பி.ஏ., காலனியில் குடியிருப்பு உரிமையாளரின் அனுமதியுடன் ஒப்பந்ததாரர் 15 ஆண்டுகள் பழமையான வேப்ப மரத்தினை வெட்டியுள்ளார். பண்டிகை காலங்களில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத நிலையில், எந்தவித அனுமதியும் பெறாமல், வீட்டின் உரிமையாளரின் உத்தரவின் பேரில் இந்த மரம் வெட்டப்பட்டுள்ளது.

"அந்த மரம் சாலையில் இருந்து 15 அடி தொலைவில் உள்ளது. பின்னர், எவ்வாறு பொதுமக்களுக்கு அது இடையூறாக இருக்கும்," என உள்ளூர்வாசி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சொந்த காரணங்களுக்காகவே வீட்டின் உரிமையாளர் இந்த மரத்தை வெட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டவிரோதமாக மரம் வெட்டப்பட்டது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.