கோவை: மியாவாக்கி திட்டத்திற்கு கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 சார்பில் ரூ. 6 லட்சம் நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் குளங்களை பாதுகாக்கும் விதமாக குளக்கரைகளில் மியாவாக்கி முறையில் சிறிய பரப்பளவு இடத்தில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் நடைபெறும் மியாவாக்கி திட்டத்திற்கு சிறுதுளி அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தத் திட்டத்திற்கு கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் 323 சார்பில் ரூ. 6 லட்சம் நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகனிடம் வழங்கினர்.