புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக காவலர் மீது புகார் : நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு

திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கணபதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் பூபாலன். இவர் கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் பெருமாநல்லூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சீருடையில் நின்று கொண்டிருந்த இருந்த 2 காவலர்கள் அவர்களை மடக்கியுள்ளனர். 



அப்போது, ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், தகாத வார்த்தையில் அந்த ஜோடியை பேசியதுடன் பூபாலனை காவலர் பிரபு தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

மேலும், அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது செல்போனைப் பிடிங்கி, அதிலிருந்த புகைப்படங்களை காவலர் பிரபு ஏற்றிக் கொண்டதாகவும், ரூ. 10,000 அபராதம் செலுத்தாவிட்டால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக பூபாலன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு காவலர் பிரபு தனது வங்கிக் கணக்கை அனுப்பி, அதில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், இதனை தர மறுத்த பூபாலன் திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிடுங்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறிய பிரபு உள்பட 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...