கோவையில் விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி கையகப்படுத்த எதிர்ப்பு : ஆட்சியரிடம் மனு

கோவை: கரவளி மாதப்பூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கரவளி மாதப்பூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கரவளி மாதப்பூர்-கணியூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கலாமணி என்பவரின் விவசாய நிலத்தை முன்னறிவிப்பு இன்றி அதிகாரிகள் கையகப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில், முறையான முன்னறிவிப்பு இன்றி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். விவசாய நிலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும், கருர்-கோவை ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ரயில்வே மேம்பாலம் பயனற்றது எனவும் கூறிய விவசாயிகள், விவசாய நிலத்திற்கு பதிலாக தரிசு நிலத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...