விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் மர இலைகளை காயப்படுத்தும் இந்து அமைப்புகள்

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையோர மரங்களில் உள்ள இலைகளில் இந்து அமைப்பினர் அனுமதியின்றி காவி ரிப்பன்களை கட்டியுள்ளனர்.


கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையோர மரங்களில் உள்ள இலைகளில் இந்து அமைப்பினர் அனுமதியின்றி காவி ரிப்பன்களை கட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து அமைப்புகளின் சார்பில் ஒவ்வொரு வீதிகளிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். மேலும், இந்து அமைப்புகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரபலங்கள் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் கொடிகளையும் கட்டி அமர்க்களப்படுத்துவர். இந்து மதத்தினர் தங்களது மத உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்டிகையாகக் கருதப்படும் இந்த விழாவில், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு, கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த நிலையில், கோவையில் கவுண்டம்பாளையம் - துடியலூர் சாலையில் அமைந்துள்ள ஐ.டி.ஐ., பகுதியில் இந்து அமைப்பினர் விதிகளை மீறி அத்துமீறி கொடிகளை கட்டியும், ரிப்பனையும் கட்டியுள்ளனர். அதாவது, சாலையோரத்தில் உள்ள மரங்களின் இலைகளில் காயப்படுத்தி காவி ரிப்பனை கட்டியுள்ளனர். இதனால், அந்த சாலை முழுவதும் காவிமயமாகக் காட்சியளிக்கிறது. அதோடு, சாலையின் நடுவின் உள்ள தடுப்புகளில் மாநகராட்சியிடமோ அல்லது போலீசிடமோ உரிய அனுமதி பெறாமல், காவி கொடிகள் மற்றும் பேனர்களை இந்து அமைப்பினர் நிறுத்தியுள்ளனர். 

அத்துமீறிய இந்த நடவடிக்கைகளை போலீசாரோ அல்லது பிற அதிகாரிகளோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...