ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளுக்கு எதிராக பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் : இயக்குநர் கரு. பழனியப்பன்

கோவை : மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்து செல்ல வேண்டுமென திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.


கோவை : மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்து செல்ல வேண்டுமென திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.

கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஓவியர் ஹசீப்கான், எழுத்தாளர் பசு.கவுதமன், அருவி பட இயக்குநர் அருண்பிரபு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் மணிவண்ணன் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 

தொடர்ந்து அவர் பேசியதாவது :- தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுக்க பாடுபட்டவர் பெரியார். மத்திய பா.ஜ.க., அரசு இல்லாவிட்டால், பெரியார் இளைஞர்களிடம் இவ்வளவு தூரம் சென்றிருக்க மாட்டார். மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை திணித்து வரும் வேளையில், பெரியாரை மக்களிடம் அதிகளவில் எடுத்துச் செல்ல வேண்டும். 

பீகாரில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஆர்.எஸ்.எஸ்., கொள்கையின்படி உடையணிய வேண்டுமென அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனை பீகாரிகள் எதிர்க்கிறார்களோ, இல்லையோ தமிழர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள், எனக் கூறினார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...