அமைச்சர் வேலுமணி ஊழல் செய்ததாக செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் கோவை மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோமல் கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பராசனின் நிறுவனம் மற்றும் கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் முறைகேடாக டெண்டர்கள் எடுப்பதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் செய்தி வெளியிட்டார்.,

இது குறித்து கோமல் கூறுகையில், " ஊழல் தொடர்பான செய்தி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளியானது. அதனைத் தொடர்ந்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினர். 'போடி லூசு' என்றும், எனக்கு மிரட்டல் விடுக்கும் தோணியிலும் அவர் பேசினார். மேலும், நான் அவரிடம் லஞ்சம் கேட்டதாகவும் கட்டுக்கதைகளை அடுக்கினார்.

ஊழல் புகாரில் சிக்கி செய்தி வெளியானதும் என் மீது குற்றச்சாட்டை திணிக்கப் பார்க்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர்களின் ஊழல் தொடர்பான செய்திகளை நான் வெளியிட்டு வருகிறேன். அதற்காக என் மீது அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவர்கள் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றால் சட்டத்தின் வாயிலாக அணுகலாம். அதனைவிடுத்து தற்போது மிரட்டல் விடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த மிரட்டல் என்னை ஒருபோதும் தடுத்துவிடாது.

இது குறித்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் கூறுகையில், "அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தியாளர் என் மீது குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தும், அவர்கள் மேலும், இதே போல செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன. 5 மாநிலங்களில் கான்டிரேக்ட் எடுத்து வருகிறோம். இதனால் எனது வருமானம் 40 சதவீதமாவது உயராதா? குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் உள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...