கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து : துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கோவை: கோவையில் கூட் ஷெட் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் கூட் ஷெட் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவருக்கு சொந்தமான ஃபோர்ட் காரை ஓட்டுநர் திருமலைசாமி என்பவர் பெண்கள் மூன்று பேருடன் காரை ஓட்டி வந்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் இருந்து பெரியகடை வீதிக்கு செல்ல கூட்ஷெட் ரோடு வழியாக வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதையடுத்து, ஓட்டுநர் உட்பட காரில் இருந்த பெண்களும் காரை விட்டு வெளியேறினர். 

இதைத்தொடர்ந்து, சிறுது நேரத்தில் கார் தீ பற்றி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். அதிக வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் அவ்வழியே வந்த வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...