வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவராக வீ.அமீது பொறுப்பேற்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு வங்கியின் தலைவராக வீ. அமீது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு வங்கியின் தலைவராக வீ. அமீது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவருடன் துணைத்தலைவராக மயில்கணேசனும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.தனராஜ், கே.எஸ்.பெருமாள், கே.எம்.ஜாபர், ஆர்.நரசப்பன், எஸ்.பாலமுருகன், ஏ.சௌந்தர்ராஜன், மலர்கொடி, பி.மீனா, சி.மேகலா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிகழ்ச்சியில் வால்பாறையில் உள்ள வருவாய் துறை அலுவலர்கள், காவல்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து தேயிலைத்தோட்ட அதிபர்கள் சங்கமும், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், வழக்கறிஞர்கள் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் கழக தொண்டர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் கார் மினி டெம்போ லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிற வங்கிகளில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்குவது போல் கூட்டுறவு வங்கியிலும் தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்குமாறு தோட்ட உரிமையாளர்களுக்கு இந்தப் புதிய நிர்வாகிகள் அறிவுறுத்தினர். மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த வங்கியில் கடனுதவி வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, பொதுமக்களும், வியாபாரிகளும் இதனைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. 



புதிய நிர்வாகிகளின் பொறுப்பில் உள்ள இந்தக் கூட்டுறவு வங்கியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முதல் டெபாசிட் தொகையாக ரூ.50,000-ஐ செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஜார்ஜ் டிராவல்ஸ் உரிமையாளர் ஆண்டனி ரூ. 50,000-ம் மற்றும் எம்.ஜி.ஆர்.மன்ற உறுப்பினர் அண்ணாதுரை ரூ. 1 லட்சத்து ஆயிரம் என மொத்தம் ரூ. 2 லட்சத்து ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...