எலி காய்ச்சல் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் : கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தகவல்

கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.


கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து கோவை பந்தய சாலையில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது :- லெப்டோஸ்பைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் நோயானது ஸ்பைரோகீட் என்னும் பாக்டீரியா வகையைச் சேர்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்குகளை தொற்றுகிறது.

இது நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் நீர், நிலம் மற்றும் உணவுப் பொருட்களில் பரவும்போது இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. எலி காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த வகை காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் இல்லை. தண்ணீர் மற்றும் உணவுகள் மூலமாகத்தான் அதிகம் உண்டாகிறது. இந்த நோய்க் கிருமிகள் உடலில் தாக்கும்போது பல்வேறு அறிகுறிகள் உண்டாகிறது. குறிப்பாக, சிவந்த கண்கள், தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பல அறிகுறிகள் உண்டாகிறது.

பொதுமக்களில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் வரும் போது மருத்துகடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணுவதை நிறுத்த வேண்டும். 

இந்த எலிக் காய்ச்சல் நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும், நமது கோவை அரசு மருத்துவமனையில் உள்ளது. எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை.

எலி காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனே தெரிவிக்க சொல்லி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரள, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள 18 கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...