கோவை அரசு மருத்துவமனையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் பலி : அனைத்து மருந்துகளும் தயாராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வாலிபர் எலி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எலி காய்ச்சல் தொடர்பான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் வாலிபர் எலி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எலி காய்ச்சல் தொடர்பான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சூழலில் எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவை கிணத்துக்கடவு அடுத்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களாக கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காய்ச்சல் வீரியமடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஏற்கனவே, அவினாசியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மனைவி காந்திமதி (52) எலி காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் வாலிபர் சதஷ்குமார் உயிரிழந்துள்ளார். கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது எலி காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இதனிடையே, எலி காய்ச்சல் பாதிப்பு குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறியதாவது:- எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் விலங்குகளிடத்தில் மட்டும் இருந்தது. ஆனால், தற்போது மனிதர்களுக்கும் இது பரவி வருகிறது. இது எலி, ஆடு, மாடு போன்ற விலங்குகளிடம் இருந்து வரும் சிறுநீரகத்தில் இருந்து பரவும் கிருமிகள் மூலம் மனிதர்களை தாக்குகிறது. இந்த கிருமிகள் உடைய சிறுநீர்கள் நீரில் கலப்பதன் மூலம் நோய் பரவுகிறது.

அதாவது, கேரளாவில் பெய்த மழையில் இந்த நோயின் பாதிப்பு பொதுமக்களுக்கு பரவியுள்ளது. இந்த எலி காய்ச்சல் தொற்றும் பொழுது இருமல் மற்றும் மூச்சு விடாதபடிக்கு நுரையீரலை பாதிக்கும். அதேபோல, இந்த காய்ச்சல் பரவும் போது உடலிலுள்ள உறுப்புகள் செயலிழக்கும். ஆகவே, வெட்னரி பணிகள், வயல்வெளி பணிகள், துப்புரவு பணிகள் செய்பவர்கள் கால்களில் பாதுகாப்புக்கு ரப்பர் ஷூ மற்றும் கை கிளவுஸ்களை அணிந்து கொள்ள வேண்டும். மேலும், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

காய்ச்சல் என்று வரும் போதே அரசு மருத்துவமனைகளுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு முன்னே எலி காய்ச்சலில் இறந்தவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உறுப்புகள் செயலிழந்த பின்புதான் இங்கு வந்து சிகிச்சை பெற்றார். ஆதலால், அவரை காப்பாற்றுவது கடினம் ஆகிவிட்டது. அதேபோல, கோவை வால்பாறையை சேர்ந்த 65 வயது முதியவரான சின்னையா என்பவர் நம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு மருத்துவமனை பொறுத்தவரை எலிக் காய்ச்சல் நோய்க்கான போதிய மருந்துகளும், மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது, என்றார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...