செண்டுமல்லி விலை கடும் சரிவு : கவலையில் மேட்டுப்பாளையம் விவசாயிகள்

கோவை: இவ்வாண்டு பெய்த சீரான மழை காரணமாக செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி மலர் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோவை: இவ்வாண்டு பெய்த சீரான மழை காரணமாக செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி மலர் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உதிரிப் பூக்கள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது செண்டுமல்லி. இச்செடியின் ஆயுள் காலம் 160 நாட்கள் என்ற நிலையில், இரண்டாவது மாதத்தில் இருந்து ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை பூக்கள் பூக்கும்.



கேரளாவின் ஓணம் திருவிழா காலங்களில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகும். மற்ற காலகட்டத்தில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனையாகும். மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை, கரும்பு, மஞ்சளுக்கு அடுத்தபடியாக செண்டுமல்லி சாகுபடியே பெருமளவு செய்யப்படும் நிலையில், இவ்வாண்டு இப்பகுதிகளில் முன் கூட்டியே பெய்த போதுமான மழை காரணமாக இதன் விளைச்சல் அதிகரித்தது.

செண்டுமல்லி தோட்டங்களில் ஊடு பயிராக கோழிக்கொண்டை பூக்களையும் நடவு செய்திருந்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை காரணமாக அம்மாநிலமே நிலை குலைந்து போன நிலையில், இங்கிருந்து கேரளாவிற்கு செல்லும் செண்டுமல்லி பூக்களின் வரத்து முற்றிலுமாக தடைபட்டது.

கேரள வியாபாரிகளின் வருகை தடைபட்ட காரணத்தினால் இதன் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாயாக சரிந்து விட்டது. இதனால் போட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கேரள வியாபாரிகளே இங்கிருந்து பூக்களை வாங்கி அம்மாநில பயன்பாட்டிற்கு போக வளைகுடா நாடுகளுக்கு கால்நடை தீவனங்களுக்கும், நிறம் ஏற்றும் பயன்பாட்டிற்கு செண்டுமல்லியை அனுப்பி வந்தனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த சீரான மழை மலர்களின் விளைச்சலுக்கு பெருமளவு உதவிய நிலையில் இதனை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தை மழை புரட்டி போட்டதால் மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...