அவினாசி - அத்திக்கடவு திட்டம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

திருப்பூர்: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் இத்திட்டத்திற்கானப் போராட்டக்குழுவைச் சேர்ந்த 25 பேர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை திரும்பப் பெறக் கோரி அவினாசியில் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டக்குழுவினர் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 12 நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளித்ததன் பேரில் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அவினாசி - அத்திக்கடவு திட்டப் போராட்டக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

"சுமார் ஒரு வருடத்திற்கு மேலாகியும் தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த வழக்கினை திரும்பப் பெறவில்லை. தற்போது, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு வழக்கினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பி.கே., வெள்ளிங்கிரி.

மேலும், அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காக எந்தவொரு புதிய அறக்கட்டளைகளையும் தொடங்கி, நிதி வசூலிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, கண்ணப்பன் என்பவர் அவினாசி- அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி வசூலித்து மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...