வ.உ.சி.,யின் 146-வது பிறந்தநாள்: கோவை மத்திய சிறையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்தூவி மரியாதை

கோவை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு செக்கு இழுத்தார். அந்த செக்கு கோவை மத்திய சிறையில் நினைவு மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி.,யின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களுக்கு மத்திய சிறை நிர்வாகத்தினர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என பலர் வந்து மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.



அதேபோல, இன்று வ.உ.சி.,யின் 146-வது பிறந்தநாளையொட்டி மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் சிறையில் அவர் இழுத்த செக்கிற்கும், அவரது உருவப்படத்திற்கும் பல்வேறு தரப்பினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சிறைத்துறை நிர்வாகத்தினர் வ.உ.சி.,யின் பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...