பா.ஜ.க., எதிர்ப்பு கோஷத்தால் விமானத்தில் இளம்பெண்ணிடம் தமிழிசை வாக்குவாதம் : நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க.,வினர் போராட்டம்

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியில் பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடியில் பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றாலத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 1,000 பேர் பா.ஜ.க.,வில் இணையும் விழாவில் பங்கேற்பதற்காக மாநில பா.ஜ.க., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் கிருஷ்ணசாமி என்பவரது மகள் லுாயிஸ்சோபியா (23) என்ற இளம்பெண்ணும் பயணித்தார். அப்போது, அந்த இளம்பெண் பா.ஜ.க., விற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் விமானத்தில் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், லுாயிஸ்சோபியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதலால் சோபியா பா.ஜ.க.,வை விமர்சித்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே, விமானத்தில் பா.ஜ.க.,வை அவதூறாகப் பேசிய இளம்பெண் சோபியாவை கைது செய்யக் கோரியும், இனி எந்த விமானத்திலும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் முன்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஏராளமான பா.ஜ.க வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் புதுக்கோட்டை காவல்நிலையம் முன்பு பா.ஜ.க.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி நகர டி.எஸ்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட இளம்பெண் சோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் பா.ஜ.க.,வினர் கலைந்து சென்றனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...