குன்னூரில் தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த உணவகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல்

நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்திற்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீலகிரி: குன்னூர் பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்திற்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 893 கடைகளை நடத்தி வருபவர்கள், அதனை வேறு நபர்களுக்கு விற்றுள்ளதும், உள் வாடகையாக பல ஆயிரங்கள் வரை மாதந்தோறும் வசூலித்து வருவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரஸ்வதி இந்த கடைகளை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டும் வகையில் கடைகளுக்கான வாடகையை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டு அவர்களுக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. 



இதனிடையே, பேருந்து நிலையம் அருகே தரமில்லாத கட்டிடத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்தை உடனடியாக காலி செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிந்த நிலையி்ல், அந்த உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில், அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். 

ஏற்கனவே, நகராட்சிக்கு சொந்தமான ஏறக்குறைய 25 கடைகளை இந்த உணவக நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டிருந்தது கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...