நவீனமாகும் பெரியகுளம், வாலாங்குளத்தின் மாதிரி வடிவங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பு

கோவை : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தின் மாதிரி வடிவங்கள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.


கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தின் மாதிரி வடிவங்கள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.



கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக, சுமார் ரூ. 88 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் வாலாங்குளம் பாலத்தின் அடிப்பகுதி ஆகியவை புனரமைக்க ஒயாசிஸ் நிறுவனத்தின் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.



குளக்கரைகளில் உருவாக்கப்படவுள்ள பூங்கா, இருக்கைகள், நடைபாதை, மோட்டார் இல்லாத வாகனங்களுக்கான சாலை, படகுக் கூடாரம், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் சிறிய அளவிலான மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாலங்குளம் பாலத்தின் அடிப்பகுதியில் உருவக்கப்பட உள்ள கட்டுமானங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றோடு, கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களின் மாதிரி வடிவமும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து கோவை ஸ்மார்ட் சிட்டியின், திட்ட மேலாளர் சுபாஷ் கூறுகையில், "குளக்கரைகளில் உருவாக்கப்படவுள்ள நவீன கட்டமைப்புகள் தெளிவான பார்வைக்காக, திட்டத்தின் மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் துல்லியமான அளவுகளோடு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வடிவங்கள் திட்டம் குறித்த துல்லியமான காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறது. இவை மக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட்சிட்டி தளத்தில் வைக்கப்பட்டுள்ளது," என்றார்.



Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...