கோவை அருகே கணவன்-மனைவி போல் வீடுகளுக்குள் நுழைந்து திருடியவர்கள் கைது

கோவை: கோவையில் பகல் நேரத்தில் கணவன்-மனைவி போல வீடுகளுக்குச் சென்று, பூட்டிய வீட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் பகல் நேரத்தில் கணவன்-மனைவி போல வீடுகளுக்குச் சென்று, பூட்டிய வீட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் தனிப்படை போலீசார் அன்னூர்-அவினாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிட்டமான வகையில் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அந்த காரில் ஒரு பெண்ணும், ஆணும் இருந்தனர்.

அவர்களை விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்றும், உடன் இருந்த பெண் அதே பகுதியை சேர்ந்த அவரது கள்ளக் காதலி சுகன்யா என்பதும் தெரியவந்தது.

மேலும், கோவையில் பகல் நேரங்களில் கணவன்-மனைவி போல் சென்று பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடம், அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...