புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவர் மனீஷ் பேங்கருக்கு கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது

கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை: நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டியின் மெடிக்கல் இயக்குநர் மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவ உலகில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை, வளர்ச்சியை மேம்படுத்தும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்திய மெடிக்கல் கவுன்சிலால் வழங்கப்படும் டாக்டர். பி.சி. ராய் தேசிய விருதானது, தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகவும் இது கருதப்படுகிறது. 

இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவரும், நோவா ஐவிஐ ஃபெர்ட்டிலிட்டி சென்டரின் தொலைநோக்கு பார்வையுள்ள மெடிக்கல் இயக்குநருமான மருத்துவர் மனீஷ் பேங்கர், கௌரவமிக்க டாக்டர். பிதான் சந்த்ரா ராய் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க இருக்கிறார். 

விருது வழங்கப்பட்டது குறித்து மருத்துவர் மனீஷ் பேங்கர் கூறுகையில், ‘’இந்தியாவில் ஐவிஃப் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதிலும், இச்சிகிச்சை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருப்பதிலும் என்னுடைய முயற்சியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் டாக்டர். பி.சி. ராய் தேசியவிருதை வழங்கி என்னை கௌரவித்திருக்கிறார்கள். 

இது எனக்கு கிடைத்திருக்கும் மாபெரும் கௌரவம். சர்வதேச அளவில், இந்தியா கருத்தரிப்பு மருத்துவத்தில், சிறப்பான நிபுணத்துவம், உயர் மருத்துவ வழிமுறைகள், சிறந்த மருத்துவ உள்கட்டமைப்புகள், மலிவான தீர்வுகளுடன் ஒரு உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாகும்," என்றார். 

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...