அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு

கோவை: நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்கிடக் கோரி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பகல் இரவு நேர காவலர்கள் மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பொது தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜி.பி., மாரிமுத்து கூறியதாவது :- மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கும் மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள். பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. 

இதைப்பற்றி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உடனடியாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும்.

ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை மற்றும் பண்டிகைக் கால விடுமுறை அளிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையரிடம் இன்று மனு அளித்துள்ளோம். 

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்தப் பிரச்சனைகளை மாநகராட்சி சரிசெய்ய தவறும் பட்சத்தில், தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...