கைவிடப்பட்ட கல் குவாரிகளை நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம்: மேட்டுப்பாளையம் விவசாயிகள் வரவேற்பு

கோவை: தமிழகத்தில் வறட்சி காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, கைவிடப்பட்ட கல் குவாரியின் குழிகளை நீர்த்தேக்கங்களாக மாற்றி பராமரிக்கும் தமிழக அரசின் புதிய திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை: தமிழகத்தில் வறட்சி காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, கைவிடப்பட்ட கல் குவாரியின் குழிகளை நீர்த்தேக்கங்களாக மாற்றி பராமரிக்கும் தமிழக அரசின் புதிய திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புவியியல் அமைவிடம், கடல் நீர் உட்புகுதல், நிலத்தடி நீராதாரம் சுரண்டப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தமிழகத்தில் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கடும் வறட்சி ஏற்படுகிறது. பெருவெள்ளம் மற்றும் வறட்சி என மாறி மாறிச் சந்திக்கும் நிலையில், கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளும் திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலை நோக்கு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வறட்சி பாதிக்கும் பகுதிகளில் தடுப்பணைகள் உள்ளிட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் உருவாக்குவது, நீர் ஆதாரங்களை புனரமைத்து அதிகளவில் நீர் தேக்குதல், நீரைச் சுத்திகரித்து மீண்டும் தேவையான இடங்களில் பயன்படுத்துதல், உள்ளிட்ட திட்டங்களோடு புதிதாகக் கைவிடப்பட்ட கல் குவாரிகளை நீர்த் தேக்கங்களாக மாற்றும் திட்டத்தையும் இணைத்துள்ளது. 

இதன்படி பெரும்பாலும் இருபது முதல் நாற்பது மீட்டர் ஆழமுள்ள பயன்பாட்டில் இல்லாத 1,188 கல் குவாரிகள் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு இதன் அளவீடுகள் பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆழமான இக்கல்குழிகளில் மழை நீர் மற்றும் ஊற்று நீர் ஓரளவு தேங்கி நிற்கும் நிலையில் இதன் அருகில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து மழைநீர் மற்றும் திறந்து விடப்படும் உபரி நீரை கல் குவாரி கல் குழிகளுக்கு திருப்பி விடப்படும்.



இதன் மூலம் தாழ்வான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் நீரை சேமிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பயன்பாட்டில் இல்லாத பெரும் கல் குழிகள் எவ்வித பாதுகாப்போ பராமரிப்போ இல்லாமல் உள்ள நிலையில், அரசின் இத்திட்டம் நல்ல பயனளிக்கும் என தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள், இத்திட்டத்தின் படி சேமிக்கப்படும் தண்ணீர் குடிநீர் பயன்பாட்டுக்கு போக அதிகளவு மீதமிருந்தாலோ, இத்தண்ணீர் குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இதனை பாசனத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே வருங்காலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது வீணாகும் தண்ணீர் சேமிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...