பல்லடம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனை அடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், சுப்பிரமணி, சதாம் உசேன், குணா மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய நால்வரும் கரூர், சேலம் காட்பாடி ஆகிய இடங்களில் மூன்று கார்களையும், லாரியையும் திருடியது தெரியவந்தது.

மேலும், மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள் திருடியதும் தெரியவந்தது.



இதனை அடுத்து அவர்களிடமிருந்து கார் மற்றும் ஏழு சவரன் நகைகளை மங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...