மழை மற்றும் வெள்ளம் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரள மக்கள் தற்போது எலிக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, அம்மாநில மக்களை படும் இன்னல்களுக்கு ஆளாக்கியது. இந்த துயரத்தில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் மீண்டு வருகின்றனர். அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு இறப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சுகாதாரத்துறை, சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கடந்த 5 நாட்களில் எலிக்காய்ச்சலுக்கு 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலியின் சிறுநீர் மூலம் (லெப்டோஸ்பை ரோசிஸ்) மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் ஆகிய இடங்களிலும் இந்த பாதிப்பு இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட தொற்று நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால், மக்கள் தாங்களாகவே சுய சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கும்படியும், அருகில் உள்ள சுகாதார மையத்தை ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.