திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமானது, கிராமப்புறங்களில் இளைஞர்களிடையே வீர விளையாட்டாகவும், தற்காப்பு கலையாகவும் திகழ்ந்து வருகிறது இந்த நிலையில், சிலம்பாட்ட விளையாட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாநில சிலம்பாட்ட கழகத்தின் தலைவராக ராஜேந்திரன் .ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டு தற்போது மாவட்ட வாரியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் பார்க் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளை மாவட்ட தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். திருப்பூர், உடுமலைபேட்டை, காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

வயதின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், இந்த மாத இறுதியில் வேலூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.