தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் : கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோவை: தமிழகத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்' என்ற பெயரில் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகளில் 'அடல் டிங்கர் லேப்' என்ற பெயரில் அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளியில் நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி., வேலுமணி மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார். 



பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- ரேங்க் அடிப்படை ஒழிக்கப்பட்டதால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் தனியார் பள்ளிகளுக்கு இருக்கும். ஆனால், கோடிக்கணக்கான மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு சிறப்பான பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த கல்விமுறை வெற்றி பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது, என்றார். 

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 500 அரசுப்பள்ளிகளில் 3 மாதங்களில் 'அடல் டிங்கர் லேப்' என்ற பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடப்படும். தமது தலைமையில் அடுத்த வாரம் ஆசிரியர்களுக்கான ஸ்கில் டெவலெப்மெண்ட் கூட்டம் நடைபெற இருக்கிறது," என்றார். 



Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...