கோவையில் கூலி தொழிலாளி மர்ம மரணம் குறித்து 2 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை : ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்

கோவை: கூலி தொழிலாளி மர்ம மரணம் குறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தலீத் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கூலி தொழிலாளி மர்ம மரணம் குறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தலீத் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கண்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள ரேவதி பந்தல் நிலையத்தில் கூலி தொழிலாளியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 29-ம் தேதி மணிகண்டன் குடிபோதையில் மயங்கி இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்த போது, சக ஊழியர்கள் முன்னுக்கு புரணாக பதிலளித்துள்ளனர். இதனிடையே, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இதனையடுத்து, மணிகண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்தனர். அதில், மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதால் பந்தல் நிலைய உரிமையாளர்கள் வேலுசாமி, ராம்கி, ராஜேஷ் மற்றும் உடன் பணியாற்றிய முருகேஷ், கருப்புசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.



பிரேத பரிசோதனை முடிந்து இரு தினங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால், இன்று அப்பகுதி கிராம மக்கள் மற்றும் தலித் அமைப்பினர் அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்திய போலீசார் ,தலித் அமைப்பு நிர்வாகிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம், இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தபட்டவர்கள் மீது வழக்குப் பதிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உறுதியளித்தார். இதனையடுத்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் வழக்குப்பதிவு செய்த பின்னர் மணிகண்டன் உடலைப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 



Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...