தமிழகத்தில் இன்று முதல் உயர்ந்தது சுங்கச்சாவடி கட்டணம் : லாரி உரிமையாளர்கள் கண்டனம்

கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

கோவை : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு லாரி உரிமையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் 14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 5 முதல் 15 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் கட்டணம், லாரி வாடகை உயர்வு, இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

சுங்க கட்டணம் உயர்வை கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், கடந்த ஜுன் மாதம் 20 தேதி முதல் எட்டு நாட்களுக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த போராட்டம் நடைபெற்றும் கூட தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறுகையில், "இவ்வளவு போராட்டம் நடத்தியும் எங்களை மதிக்காமல் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இதனால், கோவையில் மட்டும் 15 ஆயிரம் லாரிகள் பாதிக்கப்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக மீண்டும் அகில இந்திய அளவில் வரும் 21 -ம் தேதி அன்று டெல்லியில் அலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.

இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம் என்றாலும், இதனால் லாரி உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் கூறுகையில், " இந்த கட்டண உயர்வு வழக்கமான ஒன்று என்றாலும், இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், உரிமையாளர்கள் உட்பட லாரி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டணங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் நாங்கள் கூறியது போல், ஒன் டைம் செட்டில்மேண்ட் செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...