கோவையில் கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவையில் கூலி தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல்நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால், அவருடன் பணிபுரிந்தவர்களிடம் உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும், பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர். 

உடனே நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது, தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது முதலாளி வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்திருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனிடையே, வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். ஆனால், தொண்டாமுத்தூர் போலீசார் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிகண்டனின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

இளைஞரின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...