நீலகிரி: கூடலூரை அருகே பகுதியில் புலியின் தாக்குதலில் இருந்து உரிமையாளரை காப்பாற்ற ஜூலி என்ற செல்ல நாய்க்குட்டி உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: கூடலூரை அருகே பகுதியில் புலியின் தாக்குதலில் இருந்து உரிமையாளரை காப்பாற்ற ஜூலி என்ற செல்ல நாய்க்குட்டி உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூரை அடுத்த தேவர்சோலை, வூட்பிரியர் எஸ்டேட்டில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் மனோகரன். இவர் ஜூலி என்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்தி வந்தார். வழக்கம் போல நேற்று இரவு தனது நாய்க்குட்டியான ஜூலிக்கு உணவளிக்க வீட்டிற்கு வெளியே உள்ள கூண்டிற்கு சென்றார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி மனோகரனை தாக்க பாய்ந்தது. இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஜூலி, மனோகரனை காப்பாற்ற இடையில் புகுந்து நின்றது. இதனால், மனோகரனை தாக்க வந்த புலி, ஜூலியை கவ்விச் சென்றது.
உரிமையாளருக்காக உயிர் தியாகம் செய்த செல்ல நாய்க்குட்டியை நினைத்து அப்பகுதி மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், புலியைப் பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.