கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கட்டாமல், தொடர்ந்து செயல்பட்டு வந்த இரண்டு கடைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட கட்டணங்களை முறையாக செலுத்தாத வணிக வளாகம் மற்றும் கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பெரியகடை வீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் வெள்ளி பொருள் விற்பனைகம், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இதனால், அந்தக் கடையின் வாசலில் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத் தொட்டியை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல, நிலுவைத் தொகை செலுத்தாதால் இப்பகுதியில் உள்ள மற்றொரு கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.