கோவை: சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) சார்பில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி பட்டறை நேற்று நடத்தப்பட்டது.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் திறன் குறைவாக உள்ள தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்று, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது. அதனை அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் கொண்டு செல்லும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று சிஐஐ சார்பில் கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு பயற்சி பட்டறை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் (பயிற்றுவிப்பாளர் தலைவர்) சுஜித் ராய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "தேசம் முழுவதும் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பற்றாக்குறையாக இருக்கும் திறமைகள் வளர்ந்து வருகின்றது.
தொழிற்சாலை தனது தொழிலாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் பயிற்றுவிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொழிற்சாலைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இது அவசியம். பட்டதாரியாக இருக்கும் திறன் குறைந்தவர்களும், வேலையில்லாத பட்டதாரிகளும், படிக்காதவர்களும் இங்கு உள்ளனர். இதற்காக இந்திய அமைச்சகம் பயிற்றுவித்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது." என்றார்.

கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசுகையில், "கொடிசியா அமைப்பு, திறன் மேம்பாட்டு மையம் அமைத்து. அதன் மூலம், சிறு மற்றும் குறு நிறுவன தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க தயாராகி வருகிறது. தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் கை கோர்த்து கோவையில் உள்ள தொழிற்சாலைகளை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்கிறோம்." என்றார்.