கோவை: செம்புக்கரை மலைப்பகுதி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: செம்புக்கரை மலைப்பகுதி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின கிராமமான செம்புக்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். முருகேசன் (42). இவர் தனது விவசாய நிலத்தில் நேற்றிரவு காவலுக்கு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, முருகேசனை கொடூரமாக தாக்கியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கிராம மக்களுக்கு தாமதமாக தகவல் கிடைத்ததால், இன்று நண்பகலில் முருகேசனின் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.