கட்சியில் தன்னை இணைத்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என மு.க. அழகிரி கூறி உள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமாகிய மு.க., அழகிரி வலியுறுத்தி வருகிறார். இதனால், கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதைக் கூட அவர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த இருப்பதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.
இதில், ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் 7-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் மு.க அழகிரி கூறியதாவது:- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. தி.மு.க., தலைவராக மு.க.., ஸ்டாலின் தேர்வானது பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை.
தி.மு.க.,வில் எங்களை சேர்த்து கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும். கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும், எனக் கூறினார்.