நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இரவில் மட்டுமல்லாது பகலிலும் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது.
தொட்ட கண்டி, மஞ்சூர், சினிமா தியேட்டர் லைன், மட்டகண்டி, தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், அருவங்காடு பள்ளிகள் அருகேயும் கரடு உலா வருகிறது.

கரடி நடமாட்டம் தொடர்பாக, குன்னுார் அருவங்காடு, பழைய அருவங்காடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அருவங்காடு தொழிற்சாலையில் பள்ளிகள் அருகே, கரடி நடமாட்டம் இருப்பதாக ஆசிரியர்கள், தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவியர் அங்கு விளையாடச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இது குறித்து பெற்றோர் கூறுகையில், "பள்ளி மாணவ,மாணவியர் இந்த பகுதிகளில் செல்லும் போது கரடி தாக்கும் அபாயம் உள்ளதால், வனத்துறையும், தொழிற்சாலை நிர்வாகமும் சேர்ந்து, கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட
நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.