கோவை: மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை குமாரசாமி காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மணிகண்டனுக்கு குடிபழக்கம் இருந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி மணிகண்டனுக்கும், கலைவாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கலைவாணியின் கழுத்தை தன் மகனின் சட்டையால் நெறித்து மணிகண்டன் கொலை செய்துள்ளார். இதனை மறைக்க மனைவியின் சேலையை கொண்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியுள்ளார்.
இதனை கண்டறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்