திருப்பூர்: திருப்பூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளநீர் வியாபாரியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக கூலிப்படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே இளநீர் கடை நடத்தி வருபவர் இளையபாரதி. இவர் நேற்று இரவு தனது கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 5 மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் இளநீர் வியாபாரி இளையபாரதியை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதனால், பலத்த காயமடைந்த அவர், சத்தம் போட்டுள்ளார்.
இதனை கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், அவர்கள் இளையபாரதியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த சோதனை சாவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தப்பி ஓடிய 5 பேரை விரட்டிச் சென்றனர். அவர்களில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 3 பேர் காரில் தப்பி விட்டனர்.
இது குறித்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீசார் சோதனை நடத்திய போது காரில் தப்பி சென்ற மற்ற 3 பேரும் பிடிபட்டனர். பின்னர், 5 பேரையும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முருகன், காளிமுத்து, ஜெய் கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரியவந்தது