திருப்பூர் : முறையாக பொருட்களை விநியோகம் செய்யாத ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நொய்யல் வீதியில் உள்ள எல்.கே.ஓ.,36 என்ற ரேசன் கடையில் 500-க்கும் மேற்பட்ட ரேசன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தக் கடையினை அதிகாரிகள் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே திறப்பதாகவும், அந்த சமயங்களிலும் சரியான முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ரேசன் பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட அதிக தொகை கேட்பதாவும், இன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்குவதாகக் கூறிவிட்டு, கடையை திறக்காததால் ரேஷன் அட்டைதாரர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் கடையினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால், தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.