நீலகிரி : கேரள மாநில மருந்து வணிகர் சங்கத்திற்கு ரொக்கம் மற்றும் மருந்துகள் நீலகிரி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இதனால், கேரள மக்களுக்கு உணவு, உடை மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநில மருந்து வணிகர் சங்கத்திற்கு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் 55,000 மருந்து வகைகளை வழங்கினர். மேலும், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ரூ. 1,45,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.