5 கிலோ வணிக எல்.பி.ஜி., சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம்

கோவை : தொழில்முறை இஸ்திரி பெட்டி உபயோகத்திற்காக 5 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை : தொழில்முறை இஸ்திரி பெட்டி உபயோகத்திற்காக 5 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 



கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 கிலோ வணிக எல்.பி.ஜி., சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் செயல் இயக்குநர் ஆர். சித்தார்தன், கோவை விநியோகஸ்தர் சங்க தலைவர் வி. நாகராஜு, கோவை பகுதி அலுவலகத்தின் முதுநிலை பகுதி மேலாளர் அலெக்சி ஜோசப் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். 



நிகழ்ச்சியில் 5 கிலோ எல்.பி.ஜி., சிலிண்டர்களை பயன்படுத்தி தொழில்முறை இஸ்திரி பணியை மேற்கொள்வது பற்றிய செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. அத்தருணத்தில், பெருமளவிலான எல்.பி.ஜி., விநியோகஸ்தர்களும், இஸ்திரி பணியாளர்களும் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அலுவலகத்தின் செயல் இயக்குநர் சித்தார்தன் பேசியதாவது :- எல்.பி.ஜி., எரிபொருள் மாற்றம் மட்டுமல்ல வாழ்க்கையையும் மாற்றும் வல்லமை படைத்தது என்பது நிரூபணமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக எல்.பி.ஜி.,யின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வர்த்தக செயல்பாடுகளில் உபயோகம் என்பது ஒருபுறமிருக்க தொழில்துறையிலும், பல்வகையான பயன்பாடுகளுக்கு உரியதாக உள்ளது. 



இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நானோகட் என்பது எல்.பி.ஜி., சார்ந்த தயாரிப்பு. இது அதிக அளவிலான தெர்மல் கட்டிங் செயல்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு இது சிக்கனமானதாகவும் தனிச்சிறப்பு தரம் தருவதாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிசி ஆலைகளின் உலர்ந்த உமி யூனிட்டுகளுக்கு மாற்றாக, இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.பி.ஜி.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மட்டுமா..? ஜவுளி ஆலை தொழில், கட்டிட துறை, உலோகத் துறை, ஆட்டோமோட்டிவ், அச்சு தொழில், கண்ணாடி தயாரிப்பு, இராசயனம், வாசனை திரவியங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எல்.பி.ஜி., வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...