கோவை : நஞ்சுண்டாபுரம் மின்மயானம் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை, சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

நஞ்சுண்டாபுரம் மின்மயானம் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பிளாஸ்டிக் தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செல்வக்கனியின் பெண்ணுக்கு இன்று திருமணம் நடைபெறுவதையொட்டி, சுமார் 6 மணியளவில் பணியாளர்கள் உட்பட அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில், சுமார் 7 மணியளவில் அந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயானது மளமளவென வேகமாக பரவியது. இதனால், அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 6 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.