கோவையில் ஆளில்லா விமானம் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம், வனப்பகுதிகளை கண்காணிக்க நடவடிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பெரியதடாகம் அருகே மலையடிவார வனப்பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டம் இன்று கண்காணிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆளில்லா விமானம் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் மனித வனவிலங்கு மோதல் அதிகமாக உள்ளது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம், வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து விரட்ட முயற்சிக்க உள்ளோம்," என்றார்.

மேலும், இந்த சோதனை வெற்றி பெற்றால் தொடர்ந்து ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் முதல் முறையாக ட்ரோன் கோவை வனப்பகுதியில் தான் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை மக்கள் பாதுகாப்பிற்காக இடமாற்றம் செய்யவோ, முகாம்களுக்கோ கொண்டு செல்ல அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...