நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையின் காரணமாக இன்று மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில், நீலகிரியில் இன்று மாலை வழக்கம் போல பணிக்கு சென்றோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, உதகை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பரிதவித்தனர். இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும் வேறு வழியின்றி மழையில் நினைந்தவாறே சாலையில் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்குப் பரவலான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.