கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வாகன விபத்துகளை தடுக்கவும், மனித உயிரிழப்புகளைக் காக்கவும் இருசக்கர வாகனத்தில் பின்வரிசையில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசாரும் வாகன ஓட்டிகள் இடையே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், அபராதத்தையும் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைக்கவசம், உயிர்கவசம் என்பதை வலியுறுத்தி மேட்டுப்பாளையம், சிறுமுகை போலீசார் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள் சென்னகேசவன் மற்றும் இளங்கோ ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை தொடங்கி வைத்தனர். நகரின் முக்கிய சாலைகளின் வழியே வந்த இந்தப் பேரணி புறக்காவல் நிலையங்களில் முடிவடைந்தது.
இதில், காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஹெல்மெட் அணிந்து ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை பொதுமக்களுக்கு உணர்த்தினர்.