டி.சி. கொடுக்க ஆசிரியர்கள் முயன்றதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவன் பள்ளியில் தற்கொலை முயற்சி

திருப்பூர் : வேறு பள்ளியில் சென்று பயிலுமாறு கூறி பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த அருள்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 10-ம் வகுப்பு வரை அருள்புரம் பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் வகுப்பிற்காக பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இதனிடையே, அருள்புரம் அரசு பள்ளியிலேயே உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், சதீஷ்குமாரை மீண்டும் அருள்புரம் பள்ளிக்கே செல்லுமாறு பல்லடம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த சதீஷ்குமாரை, வகுப்பிற்குள் அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு சென்று பயிலுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...