நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மீண்டும் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. மேலும், கேரளா மாநிலத்தை ஒட்டி இருப்பதால் அங்கு புரட்டிப் போட்ட மழையின் தாக்கம், மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், தேவாலா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, உதகை, குன்னூர் போன்ற பகுதிகளிலும் காணப்பட்டது. இதனால், நீலகிரியில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த மழையால் மரங்கள் சாலைகளில் விழுதல், நிலச்சரிவு போன்றவற்றால் பெருத்த சேதங்களும் ஏற்பட்டன.
இதனிடையே, கேரளாவில் மழை பெய்வது நின்றுவிட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மழை பொய்த்துப் போனது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது.
இந்த நிலையில், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா சென்றவர்களும், இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மழை பெய்வதினால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், கடந்த சில நாட்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீண்டும் இந்த மழை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்தது.