நீலகிரி : காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி தேவர்சோலை பகுதி மக்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாலும் வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை பொன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும், வேட்டையாடி வருவதும் வாடிக்கையாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக கூடலூரை அடுத்த தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் உயிர்பீதியுடனேயே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்கக் கோரி தேவர்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.