நீலகிரி : குன்னூர் ஹில்குரோவ் ரயில்நிலையப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூர் வனசரகர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி: குன்னூர் ஹில்குரோவ் ரயில்நிலையப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூர் வனசரகர் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் உள்ளிட்டப் பகுதிகளில் பலாப்பழ சீசன் களைகட்டி உள்ளதால், யானைகள் இப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது, ஹில்குரோவ் மலை ரயில் பாதையை கடந்து பலாப்பழங்கள் அதிகம் விளைந்துள்ள பகுதிகளுக்கு சென்று பலாப்பழத்தை உண்டு வருகின்றன. மலை ரயில் வரும் நேரத்தில் இவை மலை ரயில் பாதையில் நின்றிருந்தாலோ, கடந்து சென்றாலோ விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், இவற்றை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் துரத்திட வேண்டும் என மலை ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து குன்னூர் வனசரகர் பெரியசாமி கூறும்போது :- யானைகள் ரயில் பாதையை கடந்து சென்று விடுவதால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வனக்குழு ஒன்று தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். மலை ரயில் வரும் நேரத்தில் யானைகள் ரயில் பாதையில் நின்று விடாமல் கண்காணித்து வருவதால், ரயில் பயணிகள் அச்சமடையத் தேவையில்லை, எனக் கூறினார்.