நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தாயை பிரிந்த கன்றுக்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடனேயே அழைத்து செல்லும் காட்டெருமை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தாயை பிரிந்த கன்றுக்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடனேயே அழைத்து செல்லும் காட்டெருமை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று கவனிக்க குடும்பத்தார் இல்லாமல் சிரமப்பட்டு வந்தது. அப்போது அங்கு சுற்றித் திரிந்த காட்டெருமை கன்றுக்குட்டி தனித்து விடப்பட்டதைப் பார்த்தது. தற்போது அரவணைப்பை இழந்த அந்த கன்றுக்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது காட்டெருமை.
கன்றுக்குட்டியும், காட்டெருமையும் எங்கும் ஒன்றாகவே செல்கின்றன. இப்படி மாறி மாறி அன்பைச் செலுத்தும் இந்த உயிரினங்கள் மனித சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவதாகவே தெரிகிறது.