கோவை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றதை தொடர்ந்து, கோவையில் தி.மு.க., தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
கோவை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றதை தொடர்ந்து, கோவையில் தி.மு.க., தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் கோப்புகளின் கையெழுத்திட்டு தலைவராக பதவியேற்றார். இதே போல், துரைமுருகனும் கோப்புகளில் கையெழுத்திட்டு பொருளாளராக பதவியேற்றார்.
இந்த சூழலில், ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, வடகோவையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் தி.மு.க., தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
தந்தையும், தலைவருமான கருணாநிதி உயிரிழந்த இந்த சூழலில், கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது என்று ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், எந்த ஆரவாரமுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள தி.மு.க., தொண்டர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
