கோவை: தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 20 நாட்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்ததால், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 8-ம் தேதி முதல் கோவை குற்றாலம் மூடப்பட்டது.
இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.